Thursday, August 29, 2024

சுவாமி ஐயப்பன் வரலாறு

 



மகிஷாசுரன் என்ற அரக்கன் இஸ்திகா கடவுளால் கொல்லப்பட்ட பிறகு, அவனது சகோதரி மகிஷி பழிவாங்குவதாக சபதம் செய்தாள். விஷ்ணுவுக்கும் சிவனுக்கும் பிறந்த குழந்தைதான் தன்னைக் கொல்ல முடியும் என்று பிரம்மாவிடம் வரம் பெற்றாள். இதைத் தடுக்க, விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து சிவனுடன் ஐக்கியமானார், இதன் விளைவாக ஐயப்பன் பிறந்தார். சிவனும் மோகினியும் குழந்தையை பம்பை ஆற்றங்கரையில் கைவிட்டனர், அங்கு குழந்தை இல்லாத ராஜா ராஜசேகர மற்றும் அவரது ராணியால் கண்டுபிடிக்கப்பட்டு தத்தெடுக்கப்பட்டது. 

குழந்தைப் பருவம்

அய்யப்பன் மன்னனின் மகனான இராஜ ராஜனுடன் தெய்வீக சாஸ்திரங்களைக் கற்றுத் திறமையான வீரனாக வளர்ந்தான். ராஜா அய்யப்பாவை ஆதரித்தார் மற்றும் அவர் அரியணைக்கு வாரிசாக வேண்டும் என்று விரும்பினார், ஆனால் ராணி அதற்கு பதிலாக தனது மகன் ராஜாவாக வேண்டும் என்று விரும்பினார். 


நோக்கத்தை உணர்தல்

ஒரு நாள், ராணி நோய்வாய்ப்பட்டாள், அரச மருத்துவர் புலிப்பாலை மருந்தாக பரிந்துரைத்தார். அய்யப்பன் பால் எடுக்க முன்வந்தார், இது ஆபத்தான வேலை என்று தெரிந்து கொண்டார். வழியில், அவர் மகிஷியை சந்தித்தார் மற்றும் பூமியில் தனது உண்மையான நோக்கம் அவளை தோற்கடிப்பதாக உணர்ந்தார். கடுமையான போருக்குப் பிறகு, ஐயப்பன் மகிஷியைக் கொன்று அவளுக்கு மோட்சத்தை வழங்கினார். 


தெய்வீகம் அங்கீகரிக்கப்பட்டது

ஐயப்பனின் தெய்வீகம் விரைவில் அங்கீகரிக்கப்பட்டு அவருக்கு ஒரு சன்னதி எழுப்பப்பட்டது. பிந்தைய ஆண்டுகளில், ஐயப்பனைப் பற்றிய கதைகள் விரிவடைந்து, மக்களை தீமையிலிருந்து பாதுகாத்து, தர்ம நடைமுறைகளை மீட்டெடுக்க உதவிய ஒரு போர்வீரன் என்று விவரிக்கிறது. அவர் "ஹரிஹரன் புத்திரன்" என்றும் அழைக்கப்படுகிறார், அதாவது ஹரி அல்லது விஷ்ணு மற்றும் "ஹரன்" அல்லது சிவன் ஆகிய இருவரின் மகன்.

Tuesday, August 20, 2024

திருவோணம் பண்டிகை


ஓணம் கேரளாவின் முதன்மையான பண்டிகை இப்பண்டிகை மஹாபலிசக்கரவர்த்தி க்காக கொண்டாடப்படுகிறது அதை பத்தி இக்கட்டுரையில் பார்ப்போம்.



மஹாபலிசக்கரவர்த்தி


    அசுரர்களிலேயே மக்கள் மிகவும் நேசிக்கக்கூடிய, வளமாக, திறமையாக ஆட்சி செய்து வந்த மகாபலி சக்கரவர்த்தி, ஒவ்வொரு ஆண்டும் மக்களை வந்து பார்த்து வளமோடு, செழிப்பாக வாழ்கிறார்களா என பார்த்து செல்வதாக கொண்டாடப்பட்டு வரும் நிகழ்வு தான் ஓணம் பண்டிகை. 

ஓணம் பண்டிகை


மலையாள சிங்கம் மாதத்தில் அஸ்தம் நட்சத்திரத்திலிருந்து திருவோணம் நட்சத்திரம் வரை 10 நாட்கள் வரை கோலாகலமாக கொண்டாடடப்படும் பண்டிகை தான் ஓணம் பண்டிகை. கடைசி நாளான திருவோணம் நட்சத்திரத்தின் போது மகாபலி மக்களை காண வருவதாக கருதப்படுகின்றது. 

எலியாக இருந்த மகாபலி சக்கரவர்த்தி


      மகாபலி சக்கரவர்த்தி முற்பிறவியில் எலியாக இருந்தார். அப்போது சிவன் கோயிலில் திரிந்து கொண்டிருந்த பொழுது, அங்கு சிவபெருமானுக்கு அருகில் ஏற்றி வைக்கப்பட்டிருந்த ஒரு விளக்கு அணையும் நிலையில் இருந்தது. அந்த விளக்கின் திரியின் மீது எலியின் வால் தற்செயலாக பட்டு தூண்டப்பட்டு மீண்டும் சுடர்விட்டு பிரகாசமாக எரிந்தது. 

தன்னையும் அறியாமல் நற்காரியம் செய்ததால், அந்த எலிக்கு அடுத்த பிறவில் சிறந்த மன்னராக மகாபலி சக்கரவர்த்தியாக படைத்தார்.

மகாபலி சக்கரவர்த்தி பெருமைகள்


       புராண கதைகளின் கூற்றுப்படி, கேரளாவை மகாபலி சக்கரவர்த்தி ஆண்டு வந்ததாகவும், அவர் மக்களை மிகவும் அரவணைப்புடன் கவனித்துக் கொண்டதாகவும், அவரின் ஆட்சியின் கீழ் நாடு செழிப்பாகவும், மக்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தனர். 

நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் மகாபலி சக்கரவர்த்தி செய்த நற்காரியங்களால் அவனே அறியாத அளவிற்கு மிகுந்த உயர்ந்த இடத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

வேள்வி 


        இந்நிலையில் நாட்டு மக்களின் நலனுக்காக ஒரு மாபெரும் வேள்வி ஒன்றை நடத்தவும், வேள்வியின் இறுதியில் நாட்டு மக்களுக்கு தான, தர்மம் வழங்க முடிவு செய்தார் மகாபலி சக்கரவர்த்தி. 
இந்த வேள்வியை அசுர குரு சுக்ராசாரியார் செய்ய முடிவு செய்யப்பட்டது. 

இதையறிந்த தேவர்கள் மகாபலி சக்கரவர்த்தியுடன் போரிட்டனர், இதில் மகாபலி வென்றார். இதனால் அச்சமடைந்த தேவர்கள், மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். 

வாமன அவதாரம் 


         தேவர்களை காப்பது தனது கடமை என கருதிய மகாவிஷ்ணு, வாமன அவதாரம் எடுத்தார். மண்ணுலகில் விஷ்ணுவின் 5வது அவதாரமாக..... காஸ்யப முனிவர், திதி தம்பதிக்கு மகனாக அவதரித்திருந்தார். 

மகாபலி சக்கரவர்த்தி தன் வேள்வி நிறைவு செய்யும் விதமாக, மக்களுக்கு தான, தர்மங்கள் செய்ய தொடங்கினார். இதில் தான தர்மங்கள் செய்து முடிக்கும் போது வாமனன் அங்கு வந்தார்.

மூன்றடி மண்


        வாமனனைப் பார்த்ததும், மகாபலி தாமதமாக வந்துவிட்டீர்களே. இப்போது தான் தானம் கொடுப்பதை நிறைவு செய்தேன் என்றார். 

அதற்கு வாமனனோ, நானோ மூன்றடி உயரம் கொண்ட சிறுவன். நான் பெரிதாக எதையும் கேட்க மாட்டேன், என் உயரத்தைப் போலவே மூன்றடி நிலம் மட்டும் கொடுத்தால் போதும் என்றார். 
அப்போது அசுர குரு சுக்ராசாரியார், இவர் விஷ்ணுவின் அவதாரமாக தோன்றுகிறது. அவருக்கு தானம் அளிப்பதற்கு முன் சற்று யோசியுங்கள் என்றார். 

ஆனால் மகாபலி சக்கரவர்த்தியோ, மகாவிஷ்ணுவே என்னிடம் தானம் பெற வந்துள்ளார் என்றால் எந்தளவிற்கு, நான் சிறந்தவன். நான் தானம் கொடுத்தே தீருவேன் என்றார். 

தானம் கொடுக்க கமண்டலத்திலிருந்து நீரை வார்க்க மகாபலி சக்கரவர்த்தி முயன்ற போது, நீர் வராத மாதிரி, வண்டு அவதாரம் எடுத்து சுக்ராச்சாரியர் கமண்டலத்தை அடைத்துக் கொண்டார். 

அப்போது வாமனன் அங்கிருந்த ஒரு குச்சியை எடுத்து கமண்டல நீர் வரும் குழாயை குத்தினார். இதனால் சுக்ராச்சாரியரின் ஒரு கண் பறிபோனது

வரம் பெற்ற மகாபலி சக்கரவர்த்தி


          அதன் பின் ஒரு அடியால் மண்ணுலகையும், மற்றொரு அடியால் விண்ணுலகத்தையும் அளந்தார் வாமனன். மூன்றாவது அடியை எங்கு வைப்பது என கேட்க, மகாபலி தன் தலை மீது வைக்குமாறு சொன்னார். 
மகாபலியின் தலையில் வாமனன் கால் வைத்ததும், மகாபலி பாதாளலோகம் சென்றார். 

அசுரராக இருந்தாலும், மக்களுக்கு நல்லவற்றை செய்த மகாபலிக்கு என்ன வரம் வேண்டும் என கேட்டார். அதற்கு மகாபலி சக்கரவர்த்தி, என் மக்களை நான் ஆண்டுக்கு ஒருமுறை வந்து பார்த்து, அவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என பார்த்து செல்ல விரும்புகிறேன் என கூறினார். 

அதற்கு அப்படியே ஆகட்டும். நீ உன் மக்களை வந்து பார்ப்பதை மக்கள் பண்டிகையாக கொண்டாடுவார்கள் என மகாவிஷ்ணு வரம் அளித்தார்.



பூக்கோலம் 

         மலையாளம் சிங்கம் மாதத்தில் திருவோணம் நட்சத்திரத்தின் 10 நாள்கள் முன் அஸ்தம் நட்சத்திரத்தில் இருந்து பூக்கோலங்கள் வித விதமாக போட்டு மகாபலியை வரவேற்க ஆரம்பிப்பார்கள் கேரளா மக்கள்.



திருவோணம் 

         10 நாள் மகாபலிசக்கரவர்த்தி மக்களை பார்க்க வரும் நாளில் திருவோணம் கொண்டாடப்படுகிறது அன்று காலையில் உறவினர்கள் அனைவரும் ஓன்று கூடி புத்தடைகள் அணிந்து வித விதமான உணவுகள் சமைத்து அனைவரும் ஓன்றாக அமர்ந்து சாப்பிடுவார்கள் அதன் பிறகு ஓண ஊஞ்சல், திருவாதிரை, வள்ளம் களி, தூம்பி துள்ளல் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடத்தி சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் ஓணம் கொண்டாடுவார்கள்.